ETV Bharat / state

நரேந்திர மோடி தோல்வியினால், வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றார் - பி.ஆர்.பாண்டியன் - வேளாண் சட்டம்

நரேந்திர மோடிக்கு தனக்கு ஏற்பட்ட தோல்வியின் காரணமாகவே வேளாண் விரோத சட்டங்களை திரும்பப் பெற்றார் என பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

பி.ஆர்.பாண்டியன் இனிப்புகள் வழங்கி வாழ்த்து

author img

By

Published : Nov 19, 2021, 6:16 PM IST

திருவாரூர்: பிரதமர் நரேந்திர மோடி வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளார். இதனால் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் மன்னார்குடி காந்தி சிலை அருகே வெடி வெடித்து இனிப்புகள் வழங்கி விவசாயிகளோடு வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மத்தியில் நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்றது முதல் விவசாயிகளுக்கு விரோதமான கொள்கைகளை பெருநிறுவனங்களுக்கு ஆதரவாக பின்பற்றினார். குறிப்பாக வேளாண் துறை மூலம் விவசாயிகளுக்கு காப்பீடு திட்டம் கொண்டுவரப்பட்டது.

அதனை தனியார் மயமாக்கி 12 பெருநிறுவன முதலாளிகள் பயனடையும் வகையில் வழிகாட்டு நெறிமுறைகளை மாற்றியமைத்தார். இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் உரிய காலத்தில் இழப்பீடு பெற முடியாத நிலையை ஏற்படுத்தினார்.

இதைத்தொடர்ந்து விவசாயிகளுக்கு எதிராக செயல்பட்ட நரேந்திர பிரதமர் மோடி 2020இல் கரோனாவால் உலகமே முடங்கி இருந்த நிலையில் ஒரு சில மணி நேரங்கள் நாடாளுமன்ற கூட்டத்தை கூட்டி விவசாயிகளுக்கு விரோதமான 3 சட்டங்களை நிறைவேற்றினார்.

விவசாயிகளிடம் கருத்து கேட்கவில்லை, மாறாக பெருநிறுவனங்கள் தயாரித்துக் கொடுத்த சட்டத்தை அவர்கள் விருப்பத்தின் பேரில் சட்டமாக்கினார்.

பி.ஆர்.பாண்டியன் இனிப்புகள் வழங்கி வாழ்த்து

இதனை எதிர்த்து ஓராண்டுகாலம் விவசாயிகள் தீவிரமான போராட்டத்தில் களம் இறங்கினோம். இந்தப் போராட்டங்களில் 400-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். இதனையெல்லாம் பொருட்படுத்தாமல் உயிரை பணையம் வைத்து விவசாயிகள் நடத்திய தொடர் போராட்டம் மோடி அரசுக்கு மாபெரும் தோல்வியை ஏற்படுத்தியது.

வெவ்வேறு மாநில சட்டப்பேரவை இடைத்தேர்தல்களில், ஏன் பாஜக ஆளும் மாநிலங்களிலேயே அக்கட்சி படுதோல்வியை தழுவியது. தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் இந்த சட்டத்தை ஆதரித்ததால் அதிமுகவிற்கு தோல்வி ஏற்பட்டு ஆட்சியை இழந்தது.

இந்நிலையில் உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடைபெறவுள்ள தேர்தல்களில் மிகப்பெரிய தோல்வியை தழுவும் என்பதை ஒப்புக் கொண்ட பிரதமர் மோடி விவசாயிகளுக்கு எதிரான சட்டத்தை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளார்.

இதன் மூலம் விவசாயிகளின் போராட்டம் மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறது" எனக் கூறினார்.

இதையும் படிங்க: Farm Laws: வேளாண் சட்டங்களை திரும்பப் பெற மத்திய அரசு முடிவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.