ETV Bharat / state

நிலத்தகராறில் தாய், மகன் கடப்பாரையால் குத்திக்கொலை; 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு! - 2பேருக்கு போலீஸ் வலைவீச்சு

நன்னிலம் அருகே நிலத்தகராறில் தாய் மற்றும் மகன் ஆகியோரை கடப்பாரையால் குத்திக்கொலை செய்த இருவரை காவல் துறையினர் தீவிரமாக வலைவீசித் தேடி வருகின்றனர்.

போலீஸ் வலைவீச்சு
போலீஸ் வலைவீச்சு
author img

By

Published : May 31, 2022, 8:05 PM IST

திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே செருகளத்தூர் கிராமத்தைச்சேர்ந்த பாஸ்கர் மனைவி அலங்காரமேரி(50) மற்றும் அவருடைய மகன் அஜய்(24). இதில் அஜய்க்கு திருமணம் ஆகி 4 மாதங்களே ஆன நிலையில், நிலப்பிரச்னை தொடர்பாக ஏற்கெனவே தனது பெரியப்பாவின் மகன்கள் அன்பழகன் மற்றும் அவருடைய தம்பி செபஸ்டின் ஆகியவர்களுக்கிடையே தகராறு இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், அன்பழகன் மற்றும் செபஸ்டியன் ஆகிய இருவரும் நேற்று (மே30) மதுபோதையில் கடப்பாரையால் அலங்காரமேரி மற்றும் அஜய் ஆகிய இருவரையும் மூர்க்கத்தனமாக மார்பில் குத்திக்கொலை செய்துவிட்டு தப்பியோடினர்.

கொலை செய்யப்பட்ட அஜய், அலங்காரமேரி
கொலை செய்யப்பட்ட அஜய், அலங்காரமேரி
இச்சம்பவம் குறித்து குடவாசல் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட தாய் மற்றும் மகனுடைய உடல்கள் பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. ஒரே நேரத்தில் தாய், மகன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: இளையராஜா சதாபிஷேக விழாவில் யுவன் 'ஆப்சென்ட்'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.