தமிழ்நாட்டின் மாநில மரமான பனை மரம் வறட்சியைத் தாங்கி வளரும் திறன் படைத்தது. தற்போது இயற்கை சார்ந்த அமைப்புகளும், இளைஞர்களும் பனை மர வளர்ப்பில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
நீர்நிலைகள் மேம்படவும் விவாயிகளின் நலனுக்காகவும், பனை விதைகளை நீர் நிலைகளின் ஓரங்களிலும், காலி இடங்களிலும் விதைக்கும் முயற்சியில் தமிழ்நாடு முழுவதுமுள்ள பல தன்னார்வளர்களும், இளைஞர்களும் செயல்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே எடைமேலையூர், எடஅனைவாசல் , எடகீழையூர், கானூர், பருத்திக்கோட்டை உள்ளிட்ட கிராமங்களில் பனை விதைப்போம் என்ற தன்னார்வ அமைப்பின் சார்பில், பள்ளி மாணவர்களும் இளைஞர்களும் சேர்ந்து 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனை விதைகளை விதைத்து வருகின்றனர்.
இதையும் படியுங்க: