ETV Bharat / state

நன்னிலத்தில் மாற்றுப்பாலம் வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை. - திருவாரூர் மாவட்டம் நன்னிலம்

திருவாரூர் : நன்னிலம் அருகே புதிய பாலம் கட்டித் தருவதாகக் கூறி மக்கள் பயன்படுத்தி வந்த பாலத்தை இடித்ததால் பாலமற்று அப்பகுதி மக்கள் தவித்து வருகின்றனர்.

திருவாரூர் செய்திகள்
மாற்றுப் பாலம் கோரி கோரிக்கை விடுக்கும் நன்னிலம், திருவாரூர் மக்கள்
author img

By

Published : Jan 23, 2020, 7:54 PM IST

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே சங்கமங்கலம் கடகத்தில் சுமார் 700 க்கும் மேற்ப்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவ்வூரின் இடையே ஓடிய நாட்டாற்றைக் கடக்க பயன்படுத்தப்பட்டு வந்த கான்க்ரீட் பாலத்தை அலுவலர்கள் இடித்துவிட்டு அதற்கு பதிலாக புதிய பாலம் கட்டிதருவதாக உறுதியளித்துள்ளனர்.

ஆனால் பாலம் இடிக்கப்பட்டு ஒரு வருடம் ஆகியும் புதிய பாலம் அமைத்துத் தரப்படாததால், பள்ளி மாணவர்களும், பொதுமக்களும் சுமார் 5 கி.மீ. தூரம்வரை சுற்றி, பேருந்து நிலையத்திற்கும், குழந்தைகள், பள்ளிகளுக்கும் செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

மாற்றுப் பாலம் கோரி கோரிக்கை விடுக்கும் நன்னிலம், திருவாரூர் மக்கள்

தற்போது அப்பகுதியில் உபயோகப்படுத்தப்பட்டுவரும் மாற்றுப்பாலமான தட்டிபாலம் எப்போது வேண்டுமானாலும் இடிந்துவிழும் நிலையில் உள்ளதால், பள்ளி மாணவர்கள் வாகன ஓட்டிகள் என அனைவரும் அச்சத்துடன் பாலத்தைக் கடந்து செல்கின்றனர். மேலும் இரவு நேரத்தில் இந்த பாலத்தை உபயோகிக்கவே அச்சமாக உள்ளதாகவும், உயிர் பயத்துடன் கடந்து செல்வதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

அறுவடைக் காலம் விரைவில் ஆரம்பமாக உள்ளதால், அறுவடை செய்த நெற்பயிர்களைக் கொண்டு செல்வதிலும் விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். எனவே உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: வில்சனை கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி கேரளாவில் மீட்பு.!

Intro:Body:திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே புதிய பாலம் கட்டி தருவதாக கூறி மக்கள் பயன்படுத்தி வந்த பாலத்தை இடித்த அதிகாரிகள் புதியபாலம் இல்லாததால்  மக்கள் வேதனை.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே சங்கமங்கலம் கடகத்தில் சுமார் 700-க்கும் மேற்ப்பட்ட குடும்பத்தினர்  வசித்து வருகின்றனர்.சங்கமங்கலம் கடகத்திற்க்கு இடையில் நாட்டாறு ஒன்று  ஒடுகிறது.இப்பகுதி மக்கள்பயன்பாட்டிற்க்காக ஒரு காண்கிரீட் பாலம் இருந்து வந்த நிலையில் இந்த  பாலத்தை தான் இரு ஊர் மக்களும் பள்ளி மாணவர்களும் பயன்படுத்தி வந்தனர்.
இந்த பாலத்தை இடித்துவிட்டு பதிலாக புதிய பாலம் கட்டிதருவதாக சொல்லி அதிகாரிகள் இடித்து விட்டு  சென்றனர். இடித்து ஒரு வருடம் ஆன நிலையில் பதிய பாலம் அமைத்துதரபடவில்லை. இதனால்  பள்ளி மாணவர்களும் பொது மக்களும் சுமார் 5-கிமீ தொலைவு சுற்றிபேருந்து நிலையத்திற்க்கும் பள்ளிகளுக்கும்  செல்லும் அவல  நிலை ஏற்ப்பட்டுள்ளது.

பிறகு புதிய மாற்றுப்பாலமாக தட்டிபாலம் அமைத்து கொடுக்கப்பட்டது இந்த பாலம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் பள்ளி மாணவர்களும் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர்.இரவு நேரத்தில் இந்த பாலத்தை பயன்படுத்த அச்சமாக உள்ளதாகவும் உயிர்பயத்துடன் கடந்து செல்வதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.

மேலும் அறுவடை காலம் ஆரம்பமாக உள்ளதால்  நான்கு சக்கர வாகனங்களும் அறுவடை. இயந்திரங்களும் செல்வதற்க்கு வாய்ப்புகள் இல்லையென்றும் அறுவடை செய்த நெற்பயிர்களை கொண்டு செல்வதில் அந்த மக்களுக்கு மிகுந்த சிரமம் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

ஆகவே உடநடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையென்றால் சாலைமறியலில் ஈடுபடபோவதாகவும் தெரிவிக்கின்றனர்.
பேட்டி: மனோஜ்,
கணேஷ் :சங்கமங்கலம்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.