கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் விதமாக கடந்த 20 நாள்களுக்கு மேலாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், வீட்டிலேயே முடங்கியிருக்கும் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் நிவாரண உதவித் தொகை அறிவித்திருந்தன.
குறிப்பாக, மத்திய அரசு 'ஜன் தன்' வங்கி கணக்கு வைத்திருக்கும் பெண்களுக்கு 500- ரூபாயும், தமிழ்நாடு அரசு அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 1000 ரூபாயும் பொதுமக்களின் வங்கி கணக்கில் செலுத்தியுள்ளது .
இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாக வங்கிகள் விடுமுறை என்பதால் இன்று வங்கி திறந்தவுடன் உதவித் தொகை பெறுவதற்காக திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முன்பாக மக்கள் கூட்டம் அதிகரித்தது. பணம் பெறுவதற்காக வந்திருந்த மக்கள் அனைவரும் அரசின் அறிவுறுத்தல்படி சமூக இடைவெளியை கடைப்பிடித்து வங்கியில் பணத்தை எடுத்துச் சென்றனர்.
இதையும் படிங்க: ஒரு மாத மின் கட்டணத்தை தள்ளுபடி செய்ய வேண்டும் - வைகோ வலியுறுத்தல்