திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே குன்னியூர் கிராமத்தில் கடந்த 21ஆம் தேதி புதிய மதுபானக் கடை திறக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அந்தக் கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக குன்னியூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, இந்த மதுபான கடைக்கு அருகில் கோயில் வழிபாட்டு தலங்கள் மற்றும் பள்ளிக் கூடம் ஆகியவை உள்ளன. மேலும், பெண்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் சென்று வர வேண்டும், இங்கு மதுபானக் கடை இருந்தால் மது பிரியர்களால் தினமும் பிரச்சனை ஏற்படும்.
ஆகவே உடனடியாக இந்த மதுபானக் கடையை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர். அதன்பின்னர், மாவட்ட ஆட்சியர் ஆனந்திடம் கடையை அகற்ற வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனர்.