திருவாரூர்: நன்னிலம் அருகே உள்ள கமுகக்குடி கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்தக் கிராம மக்களுக்காக அரை கிலோமீட்டர் தொலைவில், மயானக் கொட்டகை அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த பூதனூர் என்ற மூதாட்டி உயிரிழந்துள்ளார். அவரது உடலை அடக்கம் செய்ய சாலை வசதி இல்லாததால் வயல், வாய்க்கால்களைக் கடந்து, நீரில் உடலை சுமந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
தரமான தார் சாலை அமைத்துத் தர கோரிக்கை
இது குறித்து பலமுறை அமைச்சர்கள் முதல் அரசு அலுவலர்கள் வரை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் மயான கொட்டகைக்குச் செல்ல தரமான தார்ச்சாலை அமைத்து கொடுக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: இங்கு ஏன் வந்தீர்கள்? அண்ணாமலையிடம் சரமாரியாக கேள்வி கேட்ட நபர்