திருவாரூர் மாவட்ட ஆட்சியர் ஆனந்த் நேற்று முன்தினம் (செப்.11) அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், ”திருவாரூர் மாவட்டத்தில் முகக் கவசம் அணியாமல் வருபவர்களுக்கும், பொது இடத்தில் எச்சில் துப்புவோருக்கும் அபதாரம் விதிக்கப்படும்” என தெரிவித்தார்.
அதன்படி, இன்று (செப்.13) நகராட்சி ஆணையர் ( பொறுப்பு ) சுந்தரம் தலைமையில் நகராட்சி ஊழியர்கள், காவல்துறையினர் இணைந்து திருவாரூர் சேந்தமங்கலத்தில் முகக் கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்தவர்களுக்கு 200 ரூபாய் அபராதம் விதித்து, அறிவுரை வழங்கியும் அனுப்பி வைத்தனர். மேலும் 70க்கும் அதிகமானோருக்கு அபதாரம் விதிக்கப்பட்டதாக நகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: வேளாண் கல்லூரி கல்விக் கட்டண நிர்ணயக் குழுவின் அறிக்கை அரசிடம் ஒப்படைப்பு!
திருவாரூரில் முகக் கவசம் அணியாதோருக்கு அபராதம்! - மாவட்ட ஆட்சியர் ஆனந்த்
திருவாரூர்: முகக் கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு நகராட்சி ஊழியர்கள் அபதாரம் விதித்தனர்.