திருவாரூர் மாவட்டம் பட்டுக்கோட்டையிலிருந்து முத்துப்பேட்டை வழியாக பெருகவாழ்ந்தான்வரையிலும், மன்னார்குடியிலிருந்து பெருகவாழ்ந்தான் வழியாக சித்தமல்லி வரையிலும் செல்லும் பேருந்து சேவை கரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்டபோதிலும் இப்பகுதியில் பேருந்துகள் இயக்கப்படாமல் இருந்தது. அதன் காரணமாக அப்பகுதி மக்கள் பேருந்து சேவையை தொடங்குமாறு கோரிக்கை வைத்தனர். அதனடிப்படையில் இன்று (ஜூலை 25) பேருந்து சேவை மீண்டும் தொடங்கப்பட்டது.
இதனை தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன் கொடியசைத்து தொடங்கிவைத்தார். இந்த நிகழ்வில் திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் மாரிமுத்து, பட்டுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் அண்ணாதுரை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: பேருந்தை இயக்கி சேவையை தொடங்கிய அமைச்சர்!