திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட திருவள்ளுவர் நகரில் சிறுவர் விளையாட்டு பூங்கா கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. தற்போது பூங்காவை குப்பை கிடங்காக மாற்றும் முயற்சியில் நகராட்சி ஈடுபட்டுள்ளதாகவும், தற்போது மக்கும் குப்பைகளை உரமாக்க பூங்காவில் பல்வேறு பகுதிகளில் உள்ள குப்பைகளை இங்கு வந்து கொட்டப்படுவதாகவும் குற்றச் சாட்டு எழுந்துள்ளது.

மேலும் பூங்காவில் உள்ள குப்பைகளின் காரணமாக துர்நாற்றம் வீசுவதாகவும், தொற்று நோய்கள் பரவுவதாகவும் அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். இப்பகுதியில் நீண்ட நாட்களாக சாலை சீரமைக்கப்படாமல் உள்ளதால் கல்லூரி மாணவ மாணவிகள் கல்லூரிக்கு சென்று வர சிரமப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
எனவே தங்கள் பகுதிகளில் அடிப்படை தேவைகள் சீரமைக்கப்பட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.