திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே நீர்முள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராமையா - சுசீலா தம்பதியினர். இவர்களுக்கு சாமுவேல் (24), நெல்சன் (19) என்ற இரு மகன்கள் உள்ளனர். இவர்களுக்கு 20 வயது கடந்தபோதிலும் போதிய உடல் வளர்ச்சி இன்மையால் அனைத்து தேவைகளுக்கும் பெற்றோரை நாட வேண்டிய நிலைவுள்ளது.
இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று இரு மகன்களுடன் வருகைதந்த பெற்றோர் கருணை மனு ஒன்றை ஆட்சியரிடம் அளித்துள்ளனர். அதில், "எனது மகன்களுக்கு தேசிய நிறுவனம் சார்பில் 40 ஆயிரம் மதிப்புள்ள இம்போர்ட் வீல்சேர் வழங்க வேண்டும். குடும்ப வறுமை, மகனை பள்ளிக்கு அழைத்துச் சென்று திரும்ப அழைத்து வர முடியாத காரணத்தினால் பத்தாம் வகுப்புவரை படிக்கவைக்க முடிந்துள்ளது. எனவே, தங்களுக்கு பிறகு தங்கள் இரு மகன்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும்வகையில் கருணை அடிப்படையில் தகுதிக்கேற்ப அரசு வேலை வழங்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்
இதையும் படிங்க: கேட்பாரற்று கிடந்த பையால் பரபரப்படைந்த சென்னை விமான நிலையம்!