திருவாரூர் : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியத்திற்கு உள்பட்ட உதயமார்த்தாண்டபுரத்தில் ஊராட்சி செயலாளர் பதவி ரூ.10 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டுள்ளதாக உதயமார்த்தாண்டபுரம் முழுவதும் நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டுள்ளன.
உதயமார்த்தாண்டபுரம் ஊராட்சிக்கு ஊராட்சி செயலாளர் நிரந்தரமாக நியமிக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில், உதயமார்த்தாண்டபுரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி செயலாளர் காலியிடத்தை நிரப்புவதற்கான நேர்காணல் நடைபெற்றது. இந்த நேர்காணலில் சுமார் 20க்கும் மேற்பட்டோர் பங்குபெற்றனர்.
இதற்கிடையில் ஊராட்சி மன்றத்தலைவர் மஞ்சுளா மகேந்திரன் மற்றும் ஊராட்சி மன்ற துணை தலைவர் புவனேஸ்வரி விஜய பாஸ்கர் ஆகியோர் ரூ.10 லட்சம் பெற்றுக்கொண்டு தனக்கு ஆதரவாளரை நியமித்ததாகக் கூறப்படுகிறது.
இதைக் கண்டித்து நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டுள்ளன. இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு: பிடிஓ-க்கள் உள்பட 18 பேர் மீது வழக்குப்பதிவு