திருவாரூர் மாவட்டத்தில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்கள் இயந்திரத் தட்டுபாடுகளின் காரணமாக, தாமதமாக அறுவடை பணிகள் நடைபெற்றுவருகின்றன. மேலும் அறுவடை செய்யப்பட்ட நெல்களை விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்டும்வருகின்றன.
இந்நிலையில் நேரடி கொள்முதல் நிலையங்கள் திறந்தவெளியில் செயல்படுவதாலும், போதிய இட வசதி இல்லாத காரணத்தால் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் சாலையின் ஓரங்களில் ஆங்காங்கே அடுக்கிவைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் நேற்று திடீரென பெய்த லேசான மழையில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் ஈராமாகியுள்ளது. இதனால் மேலும் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் சேமிப்பு கிடங்கிற்கு எடுத்துச் செல்லாமல் இருப்பதால் அறுவடை செய்து கொண்டுவரும் நெல்களை கொள்முதல் செய்ய முடியாமல் தாமதப்படுத்தப்பட்டுவருகிறது.
இதனால் கொள்முதல் நிலைய அலுவலர்களுக்கும், விவசாயிகளுக்கும் இடையே நேரடி வாக்குவாதம் ஏற்படுகிறது. எனவே உடனடியாகக் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை உடனடியாகச் சேமிப்பு கிடங்கிற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என விவசாயிகள் கோரிக்கைவைத்துள்ளனர்.
இதையும் படிக்க:வியாபாரிகளின் நெல்லை வாங்காமல் தடுக்க விவசாயிகள் கோரிக்கை!