ETV Bharat / state

நெல் அறுவடை இயந்திரம் மோதி மின்கம்பம் சேதம்; சிறைபிடித்த ஊர் மக்கள் - paddy mechine clash electric bar damaged

திருவாரூர்: வேலங்குடி ஊராட்சிக்குள்பட்ட பகுதியில் நெல் அறுவடைக்காக வந்திருந்த இயந்திரம் மோதியதில் அப்பகுதியில் இருந்த மின்கம்பம் சேதமடைந்து மின்கம்பிகள் அறுந்து விழுந்தன.

திருவாரூர் செய்திகள்  வேலங்குடி செய்திகள்  நெல் அறுவடை இயந்திரம் மோதி மின்கம்பம் சேதம்  paddy mechine clash electric bar damaged  vellangudi
நெல் அறுவடை இயந்திரம் மோதி சேதமடைந்த மின்கம்பம்
author img

By

Published : Feb 15, 2020, 4:56 PM IST

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே வேலங்குடி ஊராட்சிக்குள்பட்ட கமுகக்குடிப் பகுதியில் சம்பா சாகுபடி சுமார் 5,000 ஏக்கர் பரப்பளவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நெல் அறுவடை இயந்திரம், அறுவடை பணிக்காக வந்துகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதி மின்கம்பிகள் அறுந்து விழுந்ததால் தீப்பொறிகள் ஏற்பட்டன.

இதன்பின்பு மின் கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசி தீப்பொறிகளுடன் அறுவடை இயந்திரத்தின் மேல் முழுவதுமாக சாய்ந்தன. இதனால் அந்தப் பகுதியில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டு நிலவியது. இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் அறுவடை இயந்திரத்தை சிறைபிடித்தனர்.

நெல் அறுவடை இயந்திரம் மோதி சேதமடைந்த மின்கம்பம்

அறுவடை இயந்திர முகவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், மின் ஊழியர்களுக்குத் தகவல் கொடுத்தனர். இதனைத்தொடர்ந்து தகவலறிந்து வந்த மின்வாரிய ஊழியர்கள், புதிய மின்கம்பங்களுக்காக இழப்பீடாக 10 ஆயிரம் ரூபாயை அறுவடை இயந்திர முகவர்களிடம் வசூல் செய்துவிட்டுச் சென்றனர். இதனிடையே புதிய மின்கம்பங்கள் மாற்றித் தருகிறோம் என்று மின் ஊழியர்கள் உறுதியளித்த பின்பு அங்கிருந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

திருவாரூர் செய்திகள்  வேலங்குடி செய்திகள்  நெல் அறுவடை இயந்திரம் மோதி மின்கம்பம் சேதம்  paddy mechine clash electric bar damaged  vellangudi
சேதமடைந்த மின்கம்பம்

இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி முறைகேடு: பணம் கொடுத்து தேர்ச்சி பெற்ற மூவருக்கு ஜாமின் மறுப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.