திருவாரூர் மாவட்டம் முழுவதும் சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்களில் சம்பா, தாளடி ஆகிய நெற்பயிர்கள் பயிரிடப்பட்டன. நிவர், புரெவி புயல்கள் காரணமாக பல்வேறு இடங்களில் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி நாசமாகின.
இதற்காக விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.4 ஆயிரம் நிவாரணமாக அரசு வழங்கிவருகிறது. தற்போது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 3 நாட்களுக்கும் மேலாக மழை பெய்து வருகிறது.
இதனால் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, நன்னிலம், முத்துப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் முழ்கின.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட நிலங்களை கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக வேளாண் இணை இயக்குநர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பெரம்பலூரில் கொட்டித் தீர்த்த மழை!