ETV Bharat / state

திருவாரூரில் பாரம்பரிய நெல் ரகங்களை நடவு செய்த மக்கள்!

திருவாரூர்: பாரம்பரிய நெல் ரகங்களை அதிக பரப்பளவில் விளைவிக்கும் பொருட்டு நெல்களை விவசாயிகள் நடவு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

thiruvarur
author img

By

Published : Nov 10, 2019, 8:28 PM IST

டெல்டா மாவட்டத்தை பொறுத்தவரை பெரும்பாலான மக்கள் விவசாயத்தை சார்ந்து இருக்கின்றனர். விவசாயத்தில் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் முயற்சியிலும் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் குடவாசல் அடுத்த பெரும்பண்ணையூர் கிராமத்தில் அன்பழகன் என்பவருக்குச் சொந்தமான வயலில் பாரம்பரிய நெல் நடவு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பாரம்பரிய நெல் மீட்பாளர் பசுமை எட்வின் தலைமை தாங்கினார்.

இந்த நடவுப் பணியில் கிரீன் நீடா அமைப்பினர், பொது மக்கள், விவசாயிகள் கலந்துகொண்டு பாரம்பரிய நெல் ரகமான கிச்சிலி சம்பா, இலுப்பைப்பூ சம்பா போன்ற நெல் பயிர்களை நான்கு ஏக்கர் அளவில் நடவு செய்தனர்.

பாரம்பரிய நெல்களை நடவு செய்த மக்கள்

இதில், பாரம்பரிய நெல் ரகத்தின் மகத்துவம் பற்றியும் அதன் மருத்துவ குணங்கள் பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது. மேலும், பாரம்பரிய நெல் ரகங்கள் சில்லறை விற்பனையில் விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும் என்பதால் விவசாயிகள் அதிக பரப்பளவில் சாகுபடி செய்யவேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதையும் படிங்க: நாற்று நடவு செய்த பள்ளி மாணவ. மாணவிகள்!

Intro:

Body:திருவாரூர் அருகே பாரம்பரிய நெல் ராகங்களை அதிக பரப்பளவில் விளைவிக்கும் பொருட்டு பாரம்பரிய நெல் பயிர் நடவு விழா நடைபெற்றது.

டெல்டா மாவட்டத்தை பொருத்தவரை 90சதவிகிதம் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.விவசாயத்தில் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் முயற்சியிலும் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் குடவாசல் அடுத்து பெரும்பண்ணையூர் கிராமத்தில் அன்பழகன் என்பவருக்கு சொந்தமான வயலில் பாரம்பரிய நெல் நடவு விழா பாரம்பரிய நெல் மீட்பாளர் பசுமை எட்வின் தலைமையில் நடைபெற்றது.

இந்த நடவு பணியில் கீரின் நீடா அமைப்பினர், பொது மக்கள், வேளாண் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு பாரம்பரிய நெல் ரகமான கிச்சலி சம்மா, இலுப்பைப்பூ சம்பா போன்ற நெல் பயிர்களை சுமார் நான்கு ஏக்கர் அளவில் நட்டனர்.

இந்நிகழ்ச்சியில் பாரம்பரிய நெல் ரகத்தின் மகத்துவம் அதன் மருத்துவ குணங்கள் பற்றி எடுத்துரைக்கப்ட்டது. மேலும் பாரம்பரிய நெல் ரகங்கள் சில்லறை விற்பனையில் விவசாயிகளுக்கு அதிக இலாபம் கிடைக்கும் எனவே விவசாயிகள் அதிக பரப்பளவில் சாகுபடி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.