திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே உள்ள மஞ்சக்குடி மற்றும் உத்திரங்குடியில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமான கிராம மக்கள் மருத்துவ பரிசோதனை செய்துகொண்டார்கள்.
ஓ.என்.ஜி.சி. நிறுவனமும் ஹெல்பேஜ் இந்தியா அமைப்பும் இணைந்து நடத்திய மருத்துவ முகாமில் பொது மருத்துவம், கண் மருத்துவம், எலும்பு மூட்டு சிகிச்சை, ஈ.என்.டி மற்றும் தோல் சம்பந்தமாகவும் மகளிர் மகப்பேறு மருத்துவம் உள்ளிட்ட சிறப்பு மருத்துவ சிகிச்சைகளுடன் ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
இந்த மருத்துவ முகாமில் 500க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களை பரிசோதனை செய்துகொண்டு இலவச மருந்துகள் பெற்றுக்கொண்டனர்.
இதையும் படிங்க: கொரோனா எதிரொலி: பிராய்லர் கோழியின் விலை கடும் சரிவு..!