ETV Bharat / state

போரட்டத்தில் ஈடுபட முயன்றதற்கே விவசாயிகள் கைது!

திருவாரூர்: ஓஎன்ஜிசி சார்பில் அமைக்கப்பட்டுள்ள பிளான்ட் முன்பு உண்ணாவிரத போரட்டத்தில் ஈடுபட முயன்ற விவசாயிகள் ஆறு பேரை முன் எச்சரிக்கையாக வீட்டிற்கேச் சென்று காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருவாரூர்
author img

By

Published : Aug 20, 2019, 6:20 AM IST

போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது

இந்நிலையில், இந்த பிளான்ட்டை உடனே மூட வேண்டும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாகக் கூறி அதே பகுதியைச் சேர்ந்த ஆறு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது

இந்நிலையில், இந்த பிளான்ட்டை உடனே மூட வேண்டும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாகக் கூறி அதே பகுதியைச் சேர்ந்த ஆறு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Intro:Body:சோழங்கநல்லூர் கிராமத்தில் புதிதாக ஓஎன்ஜிசி சார்பில் அமைக்கப்பட்டுள்ள பிளான்ட் முன்பு உண்ணாவிரத போரட்டத்தில் ஈடுபட முயன்ற விவசாயிகள் 6 பேரை முன் எச்சரிக்கையாக இல்லத்திற்கே சென்று கைது செய்துள்ள சம்பவத்தால் பரபரப்பு .
காவிரி டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு மத்திய அரசு பல்வேறு வகைகளில் தொடர்ந்து முயற்சி எடுத்து வருகிறது. விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தபட்டால் விவசாயம் முற்றிலும் அழிந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். எனவே ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும், காவிரி டெல்டா பாசனப் பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளான்மண்டலமாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களில் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே புழுதிக்குடி ஊராட்சி சோழங்கநல்லூர் கிராமத்தில் கடந்த 4 மாதங்களுக்கு ஓஎன்ஜிசி சார்பில் புதிய எண்ணெய் துரப்பன கிணறு அமைக்கும் பணிகள் துவங்கின. தங்கள் பகுதியில் புதிய கிணறு அமைக்க கூடாது என விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பிளாண்டில் கடந்த சில மாதங்களாக ராட்சச இயந்திரங்கள் மூலம் பூமிக்கடியில் சுமார் 3500 மீட்டர் ஆழத்திற்கு துரப்பன அமைக்க துளையிடும் பணிகள் துவங்கின. 3 மாத காலத்திற்குள் இப்பணிகள் முடிக்கப்பட்டு இந்த கிணறு மூலம் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கும் பணிகள் துவங்கியுள்ளது .
இந்த பிளான்ட்டை உடனே மூட வேண்டும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், காவிரி டெல்டா பாசனப் பகுதி களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும், அறவழியில் போராடும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மீது பொய் வழக்கு போடுவதை கைவிடக் கோரியும் கோட்டூர் அருகே புழுதிக்குடி ஊராட்சி சோழங்கநல்லூர் கிராமத்தில் புதிதாக ஓஎன்ஜிசி சார்பில் அமைக்கப்பட்டுள்ள பிளான்ட் முன்பு உண்ணாவிரத போரட்டத்தில் ஈடுபடுவோர்களை முன் எச்சரிக்கையாக அவர்களது இல்லத்திற்கே சென்று விவசாயிகள் 6 பேரை கைது செய்துள்ள சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .சோழங்கநல்லூர் கிராமம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கபட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சம் .
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.