ETV Bharat / state

செந்தில் பாலாஜி வழக்கு: மனுவை திரும்ப பெறவில்லை என்றால் அபராதம் - எச்சரித்த நீதிபதிகள்! - SENTHIL BALAJI CASE

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 15, 2024, 1:48 PM IST

சென்னை: சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆர்.அரவிந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், "அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கின் விசாரணையை சென்னை முதன்மை நீதிமன்றம் விசாரிப்பதற்கு அதிகாரமில்லை எனக் கூறியுள்ளார். எனவே, அந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

மேலும், செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட போது உரிய விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை எனவும், அதற்கு காரணமான அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும்" அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்த மனுக்கள் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம் மற்றும் எம்.ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வின் கீழ் விசாரணைக்கு வந்தது. அப்போது, எந்த ஆதாரத்தின் அடிப்படையில் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த மனுதாரர், செந்தில் பாலாஜிக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக தனிப்பட்ட முறையில் மனுத்தாக்கல் செய்துள்ளதாக கூறினார்.

பின்னர், அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ், விசாரணை நீதிமன்றத்தில் வழக்கின் விசாரணை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், வழக்குக்கு தொடர்பில்லாத மூன்றாம் நபர் இது போன்ற மனுக்களை தாக்கல் செய்ய முகாந்திரம் இல்லை எனக் கூறினார்.

அதையடுத்து, இந்த மனுவை திரும்ப பெறவில்லை என்றால் அதிக அபராதம் விதிக்கப்படும் என நீதிபதிகள் எச்சரித்தனர். இதனையடுத்து, மனுவை திரும்ப பெற்றுக்கொள்வதாக கூறியதை அடுத்து வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: கிண்டி கலைஞர் மருத்துவமனையில் தம்பி மரணம்; முறையான சிகிச்சை இல்லை என அண்ணன் குற்றச்சாட்டு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.