ETV Bharat / state

திருவாரூரில் மநீம, அமமுக வேட்புமனு தாக்கல்

திருவாரூர்: நாகை நாடாளுமன்றம், திருவாரூர் சட்டப்பேரவை தொகுதிகளில் இன்று அமமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

வேட்பாளர்கள் வேட்பு மணு தாக்கல்
author img

By

Published : Mar 26, 2019, 11:44 PM IST

திருவாரூர் சட்டப்பேரவைமற்றும் நாகை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று, அமமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் தேர்தல் அலுவலரிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.

நாடாளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் தமிழ்நாட்டின் 18 சட்டபேரவைஇடைத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனையடுத்து திமுக அதிமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.

இதனைத்தொடர்ந்து வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் எஸ்.காமராஜ் திருவாரூர் சட்டப்பேரவைஇடைத்தேர்தலில் போட்டியிட வருவாய் கோட்ட அலுவலரும் தேர்தல் அலுவலருமான முருகதாசிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

இதனைத் தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் அருண் சிதம்பரம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

இதேபோன்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாகை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்காக அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் செங்கொடி மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலரான ஆனந்த்திடம் வேட்புமனு தாக்கல் செய்தார். இதனைத்தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் வேட்பாளரான ஓய்வு பெற்ற நீதிபதி குருவைய்யா வேட்புமனு தாக்கல் செய்தார்.

Intro:திருவாரூர் சட்டமன்றம் மற்றும் நாகை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ய இறுதி நாளான இன்று அமமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.

Body:திருவாரூர் சட்டமன்ற மற்றும் நாகை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று அமமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.

பாராளுமன்ற பொதுத் தேர்தல் மற்றும் தமிழக 18 சட்டமன்ற இடைத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனையடுத்து திமுக அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

இதனைத்தொடர்ந்து வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் எஸ்.காமராஜ் திருவாரூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட வருவாய் கோட்ட அலுவலரும் தேர்தல் அலுவலருமான முருகதாசிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் அருண் சிதம்பரம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

இதே போன்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாகை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் செங்கொடி மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலரான ஆனந்த்திடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இதனைத்தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் வேட்பாளரான ஓய்வு பெற்ற நீதிபதி குருவைய்யா வேட்பு மனு தாக்கல் செய்தார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.