ETV Bharat / state

நெல் ஜெயராமன் முதலாமாண்டு நினைவஞ்சலி - மாணவர்கள் உறுதிமொழியேற்பு

author img

By

Published : Dec 6, 2019, 8:56 PM IST

திருவாரூர்: மறைந்த நெல் ஜெயராமனின் முதலாமாண்டு நினைவு நாளை முன்னிட்டு பள்ளி மாணவர்கள், இயற்கை விவசாயத்தை காக்கும் பொருட்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

nel jeyaraman
nel jeyaraman

இயற்கை விவசாயம் மீது அதீத பற்று கொண்டவர் நெல் ஜெயராமன். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி கட்டிமேடு கிராமத்தில் 1968ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் தேதி பிறந்தார். ஒன்பதாம் வகுப்பு மட்டுமே படித்திருந்த அவர், இயற்கை விவசாயத்தில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார்.

நெல் ஜெயராமனுக்கு அஞ்சலி செலுத்தும் மாணவிகள்

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் முதன்மை சீடராகவும் விளங்கினார். நம்மாழ்வாரின் வேண்டுகோளுக்கிணங்க 174 பாரம்பரிய நெல் விதைகளை மீட்டெடுத்த இயற்கை சிற்பியாகவும் திகழ்கிறார் நெல் ஜெயராமன். விவசாயத்தில் லாபம் ஈட்ட வேண்டும் என்றால், இளைஞர்கள் அனைவரும் இயற்கை விவசாயத்தை கையிலெடுக்க வேண்டும் என்று பல விழிப்புணர்வுகளை மேற்கொண்டார்.

தீபம் ஏற்றி வரும் மாணவர்கள்
தீபம் ஏற்றிய மாணவர்கள்

விவசாயம் ஒரு கலை, அதனை பயிற்சியோடு சேர்ந்த உடல் உழைப்பால் மட்டுமே வெற்றியைப் பெற முடியும் என்று எடுத்துரைத்தார். பாரம்பரியத்தை மீட்டெடுப்பதில் அயராது உழைத்த நெல் ஜெயராமன் ஆதிரங்கம் கிராமத்தில் ஆண்டுதோறும் மக்களுக்கும், இளைஞர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நெல் ஆராய்ச்சி நிறுவனத்தை நிறுவினார்.

இவரது பயணத்தில் மைல் கல்லாக விளங்குவது தேசிய நெல் திருவிழா. 2006ஆம் ஆண்டு மே மாத இறுதியில் நடத்தப்படும் இந்த விழாவில் ஆயிரக்கணக்கான விவசாயிகளை ஒன்றிணைத்து அவர்களுக்கும் இயற்கை விவசாயம் குறித்து விவரமாக தெரிய வைத்தார்.

நெல் ஜெயராமனுக்கு மரியாதை செலுத்தும் விவசாயிகள், மாணவ - மாணவிகள்

174 பாரம்பரிய நெல் வகைகளை மீட்டெடுத்ததன் மூலம் இவர் நெல் ஜெயராமன் என்று அழைக்கப்பட்டார். இன்று அவர் நம்முடன் இல்லை என்பது மனச்சோர்வை தருகிறது. இயற்கை விவசாயத்தை மீட்டெடுக்க நாடு முழுவதும் பயணங்களை மேற்கொண்டு வெற்றி கண்டார். இவரது பயணம் முடிந்து போனாலும் அவர் விட்டுச்சென்ற விதை உத்வேகத்தை அளித்துள்ளது.

இயற்கை விவசாயம் வேர் விட்டு அனைவரது மனதிலும் விருட்சமாக வளர்ந்து நிற்கிறது. நெல் ஜெயராமன் இறந்து ஒரு ஆண்டை கடந்துவிட்ட நிலையில், அவரது முதலாம் ஆண்டு நினைவு நாளான இன்று டெல்டா விவசாய மக்களால் அஞ்சலி செலுத்தப்பட்டது.

அவரது நினைவு தினத்தை முன்னிட்டு, தாய் மண் வேளாண் சார் நிறுவனம் மற்றும் 'கிரியேட்' அமைப்பும் இணைந்து நெல் ஜெயராமன் படத்திறப்பு நிகழ்ச்சி தனியார்ப் பள்ளியில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் ஐம்பதிற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில், இயற்கைப் பாதுகாப்பு சுடர் ஒளி ஓட்டம் நடைபெற்றது.

இதையும் படிங்க: தாயின் சிகிச்சைக்காக வைத்திருந்த 95 ஆயிரம் ரூபாயை பீட்சாவால் இழந்த சோகம்!

Intro:

Body:திருவாரூரில் மறைந்த நெல் ஜெயராமன் அவர்களின் முதலாமாண்டு நினைவு நாளை முன்னிட்டு பள்ளி மாணவர்கள் இயற்கை விவசாயத்தை காக்கும் பொருட்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி
கட்டிமேடு பகுதியை சேர்ந்த மறைந்த நெல் ஜெயராமன், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களின் முதன்மை சீடராக விளங்கியவர். மேலும் 174 பாரம்பரிய நெல்வகைகளை மீட்டெடுத்து வருடாந்திரம் நடைபெறும் நெல் திருவிழா மூலம் ஆயிரக்கணக்கான விவசாயிகளிடம் கொண்டு சேர்த்தவர். அவருடைய முதலாண்டு நினைவு நாளான இன்று டெல்டா விவசாய மக்களால் நினைவுகூறப்பட்டு வருகிறது.

அந்த வகையில் அவர்களது முதலாம் ஆண்டு நினைவஞ்சலி முன்னிட்டு
தாய்மண் வேளாண் சார் நிறுவனம் மற்றும் கிரியேட் அமைப்பும் இணைந்து நெல் ஜெயராமன் படத்திறப்பு நிகழ்ச்சி
தனியார் பள்ளியில் நடைபெற்றது.

முன்னதா நினைவஞ்சலியை முன்னிட்டு ஐம்பதிற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற இயற்கையை பாதுகாப்பு சுடர்ளொளி ஓட்டம் நடைபெற்றது. மேலும் இயற்கை விவசாயத்தை காக்கும் பொருட்டு மாணவ மாணவிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.