திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அமைக்கப்பட்ட கிருமி நாசினி சுரங்கப் பாதையை உணவுத் துறை அமைச்சர் காமராஜ் திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் கரோனா நோய்த் தொற்று நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் எடுக்கப்பட்டு வருவதாகவும், உலக நாடுகளோடு ஒப்பிடுகையில் இந்தியாவில் கரோனா பாதிப்பு கட்டுக்குள் இருப்பதாகவும் தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசின் சார்பில் இதுவரை 95 விழுக்காட்டினருக்கு நிவாரணப் பொருள்களுக்கான டோக்கன் மற்றும் ஆயிரம் ரூபாய் பணமும் வழங்கப்பட்டுள்ளது என்றார். மக்களின் இக்கட்டான சூழலைப் பயன்படுத்தி உணவு பொருட்களை கூடுதல் விலைக்கு விற்றாலோ, பதுக்கினாலோ அவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: ’அத்தியாவசிய பொருட்களை பதுக்கினால் தேசிய பாதுகாப்பு சட்டம்’