திருவாரூர்: நன்னிலம் அருகே கரோனா ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால் வீட்டில் வளர்த்து வந்த ஆடுகளை கறிக்காக தரகரிடம் விற்றுள்ளனர்.
இந்நிலையில் ஆட்டுடன் வளர்ந்து வந்த நாய் ஒன்று ஆட்டை பிரிய முடியாமல் அதை ஏற்றிச் சென்ற லாரியை துரத்திச் சென்றது. இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நாய் நன்றிக்கு உதாரணம் மட்டுமல்ல, அன்பிற்கும் ஆதரவிற்கும் கூட ஆகச்சிறந்த உதாரணம் என வீடியோவை பார்த்த பலரும் நெகிழ்ச்சியுடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: நீட் தேர்வுக்கு 87.1% பேர் எதிர்ப்பு - கருத்துக்கணிப்பில் தகவல்