சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து விடுதலையாகி தமிழ்நாடு திரும்பிய சசிகலா அரசியலில் தீவிரமாகக் களமாடுவார் எனப் பேசப்பட்ட நிலையில் அவர் அரசியலிலிருந்து ஒதுங்குவதாக அறிக்கை வெளியிட்டிருந்தார். இதற்கிடையில், கடந்த சில தினங்களாக அவர் கோயில்களுக்குச் சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்.
அந்தவகையில், திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகேயுள்ள ஸ்ரீ வாஞ்சிநாதர் சுவாமி திருக்கோயிலில் குப்த கங்கை தீர்த்தக் குளத்தில் அவர் வழிபாடு செய்தார். பின்னர் எமதர்மராஜா மற்றும் சித்ரகுப்தன் சன்னதியில் அர்ச்சனை செய்து பரிகார பூஜைகள் செய்து வழிப்பட்டுத் திரும்பினார்.