திருவாரூர்: நன்னிலம் அருகே பேரளம் அரசு மேல்நிலைப்பள்ளியில், மாவட்ட அளவில் நடைபெற்ற சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் மற்றும் குழந்தைகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சி தமிழ்நாடு தலைமை சீன குங் - பூ ஆசிரியர் பாண்டியன் தலைமையில் பேரளம் அரசு பள்ளி தலைமையாசிரியர் சரவணன் முன்னிலையில் நடைபெற்றது.
![v](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tvr-01-kunfu-chambian-prize-issues-vis-script-tn10029_26102021070003_2610f_1635211803_14.jpg)
இதில் சாம்பியன் பட்டம் பெற்ற மாணவர்கள், குழந்தைகள் அனைவரும் குங் - பூ தாய்ச்சி, சிலம்பம், ஈட்டி சுழற்றுதல், நுன்ஜாக் சுற்றுதல், தண்டால் உள்ளிட்டவைகளை செய்து காட்டி அசத்தினர்.
வயதான தமிழ்நாடு தலைமை சீன குங் - பூ ஆசிரியர் என்.ஆர்.பாண்டியன் நுன்ஜாக் சுற்றி அசத்தினார். அதன் பின் சாம்பியன்ஷிப் பட்டம் பெற்ற மாணவர்களுக்கும் குழந்தைகளுக்கும் சான்றிதழ்களும் கேடயங்களும் வழங்கி பாராட்டினார்.
மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள் அடுத்தாண்டு மே 5ஆம் தேதி நடைபெற உள்ள மாநில சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளனர்.
இதையும் படிங்க: கல்வான் மோதல்: தற்காப்புக் கலை வீரர்களை சீனா அனுப்பியது உண்மை தான்!