ETV Bharat / state

15 ஆண்டுகளாக தூர்வாரப்படாத வாய்க்கால்! - 15 ஆண்டுகள் தூர்வாரப்படாத வாய்க்கால்

நன்னிலம் அருகே 15 ஆண்டுகளாகத் தூர்வாரப்படாமல் புதர் மண்டி இருக்கும் பெரிய வாய்க்காலைத் தூர்வார விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தூர்வாரப்படாத வாய்க்கால்
தூர்வாரப்படாத வாய்க்கால்
author img

By

Published : Jul 12, 2021, 8:31 AM IST

Updated : Jul 12, 2021, 9:36 AM IST

திருவாரூர்: நன்னிலம் அருகே உள்ள பாவட்டக்குடி கிராமத்தில் செல்லக்கூடிய பெரிய வாய்க்கால் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாரப்படாமல் உள்ளது. அதனால் அங்குள்ள ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெற முடியாத நிலை இருக்கிறது என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இது குறித்து விவசாயிகள் பேசுகையில், "பாவட்டக்குடி சுற்று வட்டார கிராமங்களான குருஸ்தானம், கதிராமங்கலம், நெடுங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயம் செய்யப்படுகிறது.

15 ஆண்டுகளாக தூர்வாரப்படாத வாய்க்கால்

பெரிய வாய்க்கால் தூர்வாரப்படாததால் வாய்க்காலும் வயலும் ஒரே மட்டத்தில் கருவேல மரங்களுடன் புதர் மண்டி கிடக்கிறது. வாய்க்காலைத் தூர்வார பலமுறை அரசு அலுவலர்களிடம் மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த வாய்க்கால் தூர்வாரப்பட்டால் பல ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு இந்த பெரிய வாய்க்காலை இயந்திரங்கள் கொண்டு தூர்வாரி அகலப்படுத்தி கொடுக்க வேண்டும்" எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: பேருந்தில் பயணிக்கும் பெண்களுக்கு இன்று முதல் இலவச பயணச்சீட்டு

Last Updated : Jul 12, 2021, 9:36 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.