ETV Bharat / state

முறை வைத்து நீர் திறப்பது பலனளிக்கவில்லை... நன்னிலம் விவசாயிகள் வேதனை - முறை வைக்காமல் நீர் திறப்பு

மேட்டூர் அணையில் இருந்து முறை வைக்காமல் நீர் திறந்துவிட நன்னிலம், அதன் சுற்றுவட்டார விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நன்னிலம் விவசாயிகள்
நன்னிலம் விவசாயிகள்
author img

By

Published : Jun 30, 2021, 10:46 AM IST

திருவாரூர்: நன்னிலம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் குறுவை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாசன வசதிக்காக மேட்டூர் அணையிலிருந்து கடந்த ஜூன் மாதம் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.

இருதலைக்கொள்ளி எறும்பாக விவசாயிகள்...

இதுபெரிதும் உதவியாக இருக்கும் என எண்ணிய விவசாயிகளுக்கு, முறை வைத்து நீர் திறந்து விடுவது சிக்கலாக மாறியுள்ளது. இதனால் பாசன வாய்க்கால்கள் நீரின்றி காய்ந்து விடும் சூழல் ஏற்பட்டுள்ளது.

வறட்சி காணும் பாசன வாய்க்கால்கள்

இதுதொடர்பாகப் பேசிய விவசாயி சுந்தரம், 'மேட்டூர் அணையில் நீர் திறக்கப்பட்டதால் குறுவை, சம்பா சாகுபடியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றோம்.

ஆனால், மேட்டூர் நீர் கடைமடைப் பகுதிகளுக்கு தற்போது வரை செல்லாததால், நன்னிலம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பாசன வாய்க்கால்கள் நீரின்றி காய்ந்து கிடைக்கின்றன' என வேதனைத் தெரிவிக்கிறார்.

முறை வைத்து நீர் திறக்கக்கூடாது!

மேட்டூர் அணை நீரை பொதுப்பணித்துறையினர் முறை வைத்து திறந்துவிடுவது, நன்னிலம் விவசாயிகளுக்கு எந்த விதத்திலும் பலன் அளிக்கவில்லை. நன்னிலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளின் பல இடங்களில் பத்து நாட்கள் மட்டுமே நீர் திறக்கப்படுகிறது.

கடைமடைப் பகுதிகளுக்கு நீர் சென்று சேர வேண்டும் எனில், ஆறுகளுக்கு குறைந்தபட்சம் 15 நாள்களாவது நீரை திறந்துவிட வேண்டும். இல்லையெனில், நெற்பயிர்கள் கருகும் நிலை ஏற்படும் என விவசாயிகள் வேதனைத் தெரிவிக்கின்றனர்.

முறை வைக்காமல் நீர் திறக்க விவசாயிகள் வலியுறுத்தல்

வாழ்வாதாரப் பிரச்னை

தொடர்ந்து 15 அல்லது 20 நாள்கள் முறை வைக்காமல் நீர் கொடுத்தால் மட்டுமே குறுவை சம்பா பணிகள் சிறப்பாக நடைபெறும்.

தங்களது வாழ்வாதாரத்தைக் கருத்தில்கொண்டு, முறை வைக்காமல் நீர் திறக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: ஆக்கிரமிக்கப்பட்ட பாசன வாய்க்கால்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.