ETV Bharat / state

பருத்தியைக் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுங்க - நன்னிலம் விவசாயிகள் - திருவாரூர் அண்மைச் செய்திகள்

நன்னிலம் அருகே கனமழையால் சேதமடைந்த பருத்திகளை ஈரப்பதம், நிறம் மாறுதலை பொருட்படுத்தாமல் கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

நன்னிலம் விவசாயிகள்
நன்னிலம் விவசாயிகள்
author img

By

Published : Jul 18, 2021, 4:56 PM IST

திருவாரூர்: நன்னிலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 17 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் பருத்திச் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. இதனால் அறுவடைக்குத் தயார் நிலையில் இருந்த பருத்திச் செடிகள் அனைத்தும் சேதமடைந்து காணப்படுகின்றன.

இதுகுறித்து பருத்தி விவசாயிகள் பேசுகையில், "இந்த ஆண்டு கோடை சாகுபடியாக அதிகளவு விவசாயிகள் பருத்திச் சாகுபடியில் ஈடுபட்டிருந்தனர். தற்போது அறுவடை பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தன. இந்நிலையில் இரண்டு நாட்களாக பெய்த கனமழையால் பருத்திச் செடிகள் சேதமடைந்துள்ளன.

நிறம் மாறலால் கொள்முதலுக்கு மறுப்பு

சேதமடைந்திருக்கும் பருத்திச் செடி
சேதமடைந்திருக்கும் பருத்திச் செடி

மேலும் அதிக ஈரப்பதத்தால் பூச்சி, நோய்த் தாக்குதலுக்குள்ளாகி, அறுவடைக்குத் தயார் நிலையில் இருந்த பருத்தி அனைத்தும் மஞ்சள் நிறமாக மாறி வருகிறது. அவற்றை அறுவடை செய்து பருத்தி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கொடுத்தால், கொள்முதல் செய்யாமல் திருப்பி அனுப்புகின்றனர்.

செலவு செய்த பணமாவது கையில் மிஞ்சுமா?

பருத்தி சேதத்தால் ஏற்பட்டுள்ள நஷ்டம் குறித்து விவரிக்கும் நன்னிலம் பகுதி விவசாயிகள்

ஏக்கருக்கு ரூ. 15 - 20 ஆயிரம்வரை செலவு செய்தும் லாபம் கிடைக்காமல் தவித்து வருகின்றோம்.

இதில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டுதான் சம்பா சாகுபடிக்குத் தயாராகும் சூழலில், செலவு செய்த பணமாவது கையில் மிஞ்சுமா? என்ற அச்சத்தில் உள்ளோம்.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, ஈரப்பதம், நிறம் மாறுதலை பொருட்படுத்தாமல், பருத்தியை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

இதையும் படிங்க: மேகதாது அணை விவகாரம்: முதலமைச்சர் டெல்லி பயணம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.