திருவாரூரில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் நாகை நாடாளுமன்ற தொகுதி மற்றும் திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கான செயல்வீரர்கள் கூட்டம் திமுக மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பேசியதாவது,
அரசியல் காற்று என்பது திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு சாதகமாக உள்ளதாகவும், புதுச்சேரி உட்பட 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் இக்கூட்டணி வெற்றி பெறுவதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்று கூறினார்.
மேலும் திமுக தலைமையிலான அமைந்துள்ள கூட்டணி அமைப்பு ரீதியான கூட்டணி. ஆனால் அதிமுக அமைத்துள்ள கூட்டணி பண பலத்தால் அமைந்துள்ளது.
மோடி அரசு ஜூன் மூன்றாம் தேதி சட்ட ரீதியாக முடிவுக்கு வருகிறது. மோடிக்கு எடுபிடியாக இருக்கும் எடப்பாடி அரசு வருகின்ற 18 சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெறுவதன் வாயிலாக எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சி கலைக்கப்பட்டு திமுக தலைவர் ஸ்டாலின் அரசியலமைப்புச் சட்டத்தின்படி சட்டரீதியாக முதலமைச்சர் பதவியை ஏற்பார் என பேசினார்.