மத்திய அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்பு தெரிவித்து கல்லூரி மாணவர்கள், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பலர் போராடி வருகின்றனர். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடிய மாணவர்கள் மீதும், பொதுமக்கள் மீதும் காவல் துறை தடியடி நடத்தியது. இந்த போராட்டத்தில் இதுவரை 18 பேர் இறந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பெரியார் சிலை முன்பு இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் இஸ்லாமிய பெண்கள், குழந்தைகள் உட்பட 700க்கும் மேற்பட்டோர் குடியுரிமை திருத்தச் சட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். மேலும், போரட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல் துறையினரை கண்டித்தும் மத்திய பாஜக அரசுக்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பினர்.
போராட்டத்தில் கலந்துகொண்ட இந்து சிறுமி மதிவர்ஷினி கூறுகையில், "இஸ்லாமியர்களை நாட்டை விட்டே வெளியேற்றிவிடுவோம் என்று கூறும் பிரதமர் மோடி இனிமேல் அரபு நாடுகளில் இருந்து பெட்ரோலை வாங்க வேண்டாம். மக்களின் வரிப்பணத்தின் மூலம் விமானத்தில் வெளிநாடு பயணம் செய்கிறீர்களே. இனிமேல் பெட்ரோல் இல்லாமல் பாத யாத்திரையாக நடந்து செல்வீர்களா?" என பேசியிருக்கிறார்..
இதையும் படிங்க: ‘இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம்’ - அமைச்சர் வேலுமணி