திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் முழுவதும் இந்தாண்டு சுமார் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் சம்பா, தாளடி பயிர்கள் நடப்பட்டு தற்போது அறுவடை பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து கடும் பனிப்பொழிவு நிலவுவதால் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளில் ஈரப்பதம் அதிகரிப்பதால் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஈரப்பதத்தைக் காரணம் காட்டி அலைக்கழிப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும் அவ்வப்போது பல்வேறு இடங்களில் மழை பெய்து வருவதால், நெல்லை உலர வைக்க முடியாத நிலை உள்ளது எனவும், தமிழ்நாடு அரசு நிர்ணயம் செய்த 17 விழுக்காட்டிற்கு மேல் நெல் மூட்டைகளில் ஈரப்பதம் இருப்பதாலும் நெல் கொள்முதல் செய்யப்படாமல் உள்ளது எனவும் விவசாயிகள் தெரிவித்தனர்.
எனவே விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கவனத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு நிர்ணயிக்கப்பட்ட ஈரப்பத அளவை 17 விழுக்காட்டிலிருந்து 20 விழுக்காடாக உயர்த்தி அறிவித்து நெல் கொள்முதல் செய்யப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழப்பு, இருவர் படுகாயம்