ETV Bharat / state

திமுக கலைஞரின் குடும்ப சொத்து - அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சனம் - செல்லூர் ராஜூ

திருப்பூர்: திமுக கட்சி கலைஞரின் குடும்ப சொத்து என அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சனம் செய்துள்ளார்.

sellur raju
author img

By

Published : Jul 22, 2019, 5:24 PM IST

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் கூட்டுறவுத் துறை சார்பில் கொப்பரை கொள்முதல் மையம் தொடக்க விழா நடைபெற்றது. இதில் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ ஆகியோர் கலந்துகொண்டு கொள்முதல் மையத்தை திறந்து வைத்தனர்.

அப்போது அமைச்சர் செல்லூர் ராஜு கூறுகையில், " அதிமுக ஆட்சியில் கூட்டுறவுத்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. திமுக கட்சி அண்ணாவின் விசுவாசிகளுக்கான கழகம் கிடையாது. அது கலைஞரின் குடும்ப சொத்து, கலைஞருக்குப் பிறகு அவரது வாரிசுகள் மட்டுமே திமுகவில் தலைமைப் பொறுப்பில் இருந்து வருகின்றனர்.

மேலும் அவர் கூறுகையில், உள்ளாட்சித் தேர்தல் எப்போது வந்தாலும் அதிமுக கண்டிப்பாக வெற்றி பெரும். இதற்கான அட்டவணையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி போட்டு வைத்துள்ளார். ஸ்டாலினின் பொய்யான வாக்குறுதிகளை மக்கள் இனியும் நம்பப் போவதில்லை, வேலூர் இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணியே வெற்றி பெறும்" என்றார

கொப்பரை கொள்முதல் மையம் தொடக்க விழா

Intro:அண்ணாவின் விசுவாசிகளுக்கு திமுக கழகம் இல்லை திமுக கலைஞரின் குடும்ப சொத்து ஸ்டாலினின் அழைப்பை திமுகவினர் என அமைச்சர் செல்லூர் ராஜு திருப்பூரில் பேட்டி.

Body:திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கூட்டுறவுத் துறை சார்பில் கொப்பரை கொள்முதல் மையம் துவக்க விழா நடைபெற்றது இதில் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ உள்ளிட்டோர் கலந்துகொண்டு கொள்முதல் மையத்தை திறந்து வைத்தனர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு கூட்டுறவுத்துறை அம்மாவின் அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் திமுக ஆட்சி காலத்தில் கூட்டுறவு துறையில் நடந்த முறைகளையும் சரி செய்து சிறப்பாக பணியாற்றி வருகிறோம் எனவும் திமுக அண்ணாவின் விசுவாசிகளுக்கு தாய்க்கழகம் கிடையாது அது கலைஞரின் குடும்ப சொத்து கலைஞருக்குப் பிறகு அவரது வாரிசுகள் தலைமைப் பொறுப்பில் இருந்து வருகின்றனர் அதிமுகவினர் ஸ்டாலினின் அழைத்து வந்துவிடுவார் உள்ளாட்சித் தேர்தல் எப்போது வந்தாலும் அதிமுகவின் ஆட்சியை அதற்கான அட்டவணைகளை எடப்பாடி போட்டு வைத்துள்ளார் அதனால் நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம் ஸ்டாலினின் பொய்யான வாக்குறுதிகளை மக்கள் இனியும் நம்பப் போவதில்லை வேலூர் இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணியை வெற்றி பெறும் எனவும் பேட்டியளித்தார் இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.