திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அதம்பார் பகுதியில் திருமலைராஜன் ஆறு தூர்வாரும் பணிகளை தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் காமராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் அமைச்சர் காமராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "எந்த ஆண்டும் இல்லாத வகையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்ட காலத்திலிருந்து இன்று வரை இந்த ஆண்டுதான் 24 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. குறுவை சாகுபடிக்காக இன்று மேட்டூர் அணையிலிருந்து தமிழ்நாடு முதலமைச்சர் தண்ணீரை திறந்துள்ளார்.
இதனால், இந்த ஆண்டும் குறுவை சாகுபடியை சிறப்பாக செய்து அதிக மகசூல் பெற முடியும் என்கிற நம்பிக்கை விவசாயிகளிடத்தில் உள்ளது. தூர்வாரும் பணிகள் மற்றும் மனித சக்திகளை கொண்டு குடிமராமத்து மற்றும் குளங்கள் தூர்வாருதல் போன்ற பணிகள் திருவாரூர் மாவட்டத்தில் 82 விழுக்காடு நிறைவு பெற்றுள்ளது. கரோனா தொற்றால் சமூக பரவல் எதுவும் இல்லை. குறிப்பாக சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட சில மாவட்ட மக்கள் மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும் என அரசு சார்பில் கேட்டுக்கொள்கிறோம்" என்றார்.
இதையும் படிங்க: எஸ்பிஐ வங்கியில் வீட்டிலிருந்தபடியே உடனடி சேமிப்புக் கணக்கு; ஆதார் அவசியம்!