திருவாரூர் மாவட்டம் குடவாசலில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் நிகழ்ச்சியை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "தமிழ்நாட்டிலேயே இன்சூரன்ஸ் தொகையை திருவாரூர் மாவட்டத்தில்தான் கடந்த காலங்களிலிருந்து உடனுக்குடன் பெற்று கொடுக்கப்பட்டது. இந்தாண்டு இன்சூரன்ஸ் வழங்குவதில் ஏற்படும் தடங்கலை சரிசெய்ய வலியுறுத்தி வருகிறோம்.
இ-பாஸ் பொறுத்தவரை முழுமையாக ரத்து செய்யப்படவில்லை. வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் மட்டும் தான் இ-பாஸ் பெற வேண்டும். மாநிலத்தில் பயணம் செய்பவர்கள் யாரும் இ-பாஸ் வாங்கத் தேவையில்லை என முதலமைச்சர் கூறியுள்ளார். வங்கி கடன் தள்ளுபடி செய்வது குறித்து வங்கிகள் தான் முடிவு செய்ய வேண்டும்.
ரேஷன் கடை ஊழியர்கள் அவர்களது கோரிக்கையை முன்வைத்து போராட்டத்தை அறிவித்துள்ளார்கள். அவர்களது கோரிக்கைகள் பேச்சுவார்த்தைக்கு பின் பரிசீலிக்கப்படும். அதற்கான முடிவினை கூட்டுறவுத்துறை அமைச்சர் அறிவிப்பார்" என்றார்.
இதையும் படிங்க: ’அரசியல் முதிர்ச்சியற்ற அரை இத்தாலியர் ராகுல்’ - ஹெச்.ராஜா தாக்கு