திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகின்ற ஆகஸ்ட் 28ஆம் தேதி முதலமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக் ஏற்பாடுகள் குறித்து தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் காமராஜ் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள், வளர்ச்சிப்பணிகளை முதலமைச்சர் ஆய்வு செய்து வருகிறார்.
அதனடிப்படையில் திருவாரூர் மாவட்டத்தில் வளர்ச்சிப் பணிகள் மற்றும் கரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக வருகின்ற ஆகஸ்ட் 28ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருவாரூர் வருகிறார். பொது போக்குவரத்து பயன்பாடு குறித்தும், ஊரடங்கு தளர்வுகள் குறித்தும் வல்லுனர்களின் அறிக்கையை பொறுத்தே தமிழ்நாடு முதலமைச்சர் முடிவெடுப்பார்.
டெல்டா மாவட்டங்களில் இதுவரை இல்லாத அளவிற்கு 3 லட்சத்து 87 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. குறுவை சாகுபடிக்கு தேவையான அளவு தண்ணீர் இருப்பில் உள்ளது" என்றார்.
இதையும் படிங்க: ‘வருமானத்தை காட்டிலும் மக்கள் வவுறு நிறைவதுதான் பெரிது’- ஒரு ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்யும் பாட்டியின் பாசம்...!