ETV Bharat / state

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நிவாரணம் வேண்டும் - கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம் - Trichy   Struggling to request Communist relief

திருச்சி: புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

author img

By

Published : May 19, 2020, 1:33 PM IST

தமிழ்நாடு முழுவதும், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஊர் திரும்ப நிவாரணம் வழங்க வேண்டும், வயது முதிர்ந்தவர்கள், கைம்பெண்களின் ஓய்வூதிய நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் அறிவிப்புகளை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சமூக இடைவெளியுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் திருச்சி மாநகர், புறநகர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் 200க்கும் மேற்பட்ட இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் திராவிட மணி தலைமையில் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் இந்திரஜித், ஏஐடியூசி மாவட்ட பொதுச் செயலாளர் சுரேஷ், மாவட்ட தலைவர் நடராஜா, நிர்வாகக் குழு உறுப்பினர் சிவா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

அதேபோன்று திருவாரூரில் கரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 60 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள், தொழிலாளர்கள் வேலையில்லாமல் பெரும் பொருளாதார இழப்பை சந்தித்துள்ளனர்.

ஆகவே அனைத்து தொழிலாளர்களுக்கும் கரோனா நிவாரணமாக ரூ. 10 ஆயிரம் வழங்க வலியுறுத்தி 100க்கும் மேற்பட்ட இடங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: மத்திய, மாநில அரசை கண்டித்து மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.