திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் தனியார் நிதி நிறுவனம் சார்பில் கடன் தீர்வு முகாம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, வேதாரண்யம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
இந்நிலையில், பொதுமக்கள் வாங்கிய சுய உதவிக் குழு கடன், வீடு கட்டுவதற்கு வாங்கிய கடன் தொகை என முழுவதும் செலுத்திய நிலையில், தற்போது கந்துவட்டி போல மீண்டும் கடுமையாக பணம் கேட்டுள்ளனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு திருமண மண்டபத்துக்கு வெளியே 100க்கும் மேற்பட்டோர் தர்ணாவில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல் துறையினர், நிதி நிறுவன ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்துச் சென்றனர் .
இதையும் படிங்க: வெடிகுண்டு வீசிய ஆர்எஸ்எஸ் பிரமுகர் - கைது செய்த காவல் துறை