திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூர்வாரும் பணிகள் குறித்து அனைத்து அரசு அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
அப்போது பேசிய ஆட்சியர், "திருவாரூர் மாவட்டத்தில் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் 174 பணிகள் பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 1284.32 கி.மீ பரப்பளவில் மேற்கொள்ளப்படவுள்ளன.
இதன்படி, குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்குத் தண்ணீர் திறப்பதற்குள் ஆறுகள், ஏரிகள், வாய்க்கால்களை தூர்வாரி முடிக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
அந்தவகையில் இந்தத் தூர்வாரும் பணியினை சிறப்பான பணியாக மேற்கொள்கின்ற வகையில் தேவைகேற்ப கூடுதல் இயந்திரங்களை பணியில் ஈடுபடுத்தி விரைந்து முடித்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அரசு அலுவலர்களிடம் ஆலோசனைகளை வழங்கினார்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் பொன்னம்மாள், திட்ட இயக்குநர் தெய்வ நாயகி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.