திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி காந்தி சாலை பகுதியை சேர்ந்த கமலா - ராஜன் தம்பதியரின் மகன் ஆதவன் (8). இவர் நேற்று காலை தனது வீட்டின் அருகே நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தார். வெகு நேரமாகியும் சிறுவன் வீடு திரும்பாததால், பெற்றோர் மன்னார்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்நிலையில், வீட்டின் அருகே உள்ள திருப்பாற்கடல் குளத்தில் சிறுவனின் உடல் மிதப்பதாக அருகிலிருந்தவர்கள் தகவல் அளித்தனர். அந்த தகவலையடுத்து ஆதவனின் உறவினர்களும் பெற்றோரும் சென்று பார்த்தபோது காணாமல் போன 8 வயது சிறுவன் ஆதவன் நீரில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது.
பின்னர் இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காவல் துறையினர் சிறுவனின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக மன்னார்குடி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ம.பி-யில் கொடூரம்: 5 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த சிறுவன் கைது!