திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாலுகாவிற்குட்பட்ட திருமக்கோட்டை திருமேனி ஏரிக்கரையில் 14 நரிக்குறவர் குடும்பங்கள் வசித்துவருகின்றன. அவர்கள் ஊசிமணி வியாபாரம் செய்ய, தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்க, திருவாரூர் மாவட்ட தொழில் மையத்தின் மூலம் கடன் கொடுக்க அரசு சார்ந்த வங்கிக்கு பரிந்துரைக்கப்பட்டது.
இதற்கு ஆட்சியரும் பரிந்துரை செய்த நிலையில், கடன் வாங்குவதற்காக நரிக்குறவர்கள் பலமுறை வங்கிக்கு சென்றனர். ஆனால், வங்கி மேலாளர் கடன் வழங்காமல் ஒருவருடமாக நரிக்குறவர்களை அலைகழித்து உதாசினப்படுத்தியதாகவும், வங்கிக்கு வெளியே நிற்கவைத்து அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, மன்னார்குடி சட்டப்பேரவை உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜாவிடம் நரிக்குறவர்கள் முறையிட்டனர். இதையடுத்து வங்கி மேலாளரை சந்தித்த ராஜா, நரிக்குறவ மக்களுக்கு கடன் வழங்குவதில் என்ன பிரச்னை என சரமாரியாக கேள்வி ஏழுப்பினார். மேலும் வங்கி அலுவலருக்கு இணையாக, நரிக்குறவரை அமரவைத்து இவரும் வாடிக்கையாளர்தான், இவரை சமமாக நடத்துவதில் என்ன சிக்கல், அரசு பரிந்துரை செய்த கடனை வழங்குவதில் என்ன தயக்கம் என தொடர்ந்து கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க:’தமிழ் மக்களின் உணர்வுகளை குடியரசுத் தலைவரிடம் தெரிவித்துள்ளோம்’ - கனிமொழி எம்.பி.