திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள பெருகவாழ்ந்தான் பகுதியில் உள்ள 8 ஆயிரம் ஹெக்டேர் ஏக்கர் விளைநிலங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் முழுவதும் தொடர் மழையால் சேதமடைந்துள்ளன.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளை வேளாண்துறை அலுவலர்கள் கணக்கெடுக்காமல் விளைச்சல் அதிகமாக உள்ள பகுதிகளை மட்டும் பார்வையிட்டு சென்றனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளை முறையாக கணக்கெடுத்து 100 விழுக்காடு பயிர் காப்பீட்டுத் தொகை வழங்க வலியுறுத்தி வேளாண்துறை அலுவலர்களை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வேளாண்துறை அலுவலர் தங்கபாண்டியன், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் காப்பீட்டுத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த பின்பு சாலை மறியல் கைவிடப்பட்டது.
இதையும் படிங்க: பிப்ரவரியில் கங்கைகொண்ட சோழபுரத்தில் அகழாய்வு பணிகள் தொடக்கம்!