ETV Bharat / state

காவிரி பிரச்னையில் திருப்புமுனையை உருவாக்கியவர் பிரணாப் முகர்ஜி: பி.ஆர்.பாண்டியன் உருக்கம்!

author img

By

Published : Sep 1, 2020, 9:43 PM IST

திருவாரூர்: முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி காவிரி பிரச்னையில் திருப்புமுனையை உருவாக்கியவர் என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

பி.ஆர்.பாண்டியன் உருக்கம்
பி.ஆர்.பாண்டியன் உருக்கம்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மறைவிற்கு இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

அதில், "இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மரணமடைந்தார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. தமிழ், தமிழ் மக்கள் மீது மிகுந்த அன்பு கொண்டவர். காவிரி உரிமை மீட்பதற்கான போராட்டம் உச்சகட்டத்தில் இருந்த போது தமிழ்நாடு விவசாயிகளின் உணர்வுகளுக்கு முதன்மை மதிப்பளித்தார்.

2016 ஜூன் 6 ஆம் தேதி டெல்லி ஜானாதிபதி மாளிகையில் எனது தலைமையில் 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் குழுவோடு அவரை சந்தித்தோம். முகமலர்ச்சியோடு எங்களை வரவேற்றார்.

மேலும் விருந்தினர்களுக்கான தர்பார் ஹாலில் மதிய விருந்து கொடுத்து, சுமார் 6 மணி நேரம் மாளிகை முழுவதும் சுற்றி காண்பிக்க அலுவலர்களுக்கு உத்திரவிட்டார்.

முன்னதாக அவரிடம் கர்நாடக உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு முரணாக காவிரி குறுக்கே பூமி பூஜை செய்து மேகதாட்டு அணை கட்ட முயற்சிப்பதை தடுத்து நிறுத்தவும், தமிழ்நாடு கடும் வறட்சியில் உள்ளதால் உடனடியாக கர்நாடக அரசு தண்ணீரை திறக்க கோரியும், ஆணையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக அரசு கூட்டும் அனைத்து கட்சி கூட்டம் குறித்தும் நாங்கள் மனு அளித்து விளக்கினோம். அது குறித்து எங்களுடன் 30 நிமிடங்கள் அவர் கலந்துரையாடினார்.

எங்கள் கோரிக்கையை சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கு உரிய விளக்கம் கேட்கப்பட்டு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக எழுத்து பூர்வமாக அவர் பதில் கடிதம் அனுப்பி தமிழ்நாடு உரிமைக்கான சட்ட அங்கீகாரம் வழங்கினார்.

அந்த கடிதம் தான் காவிரி பிரச்னையில் வரலாற்று திருப்புமுனையை தந்தது. இன்று உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கும் அது ஆதாரமாகவும் உள்ளது. அதன் பிறகு மத்திய அமைச்சர்களின் கர்நாடகாவிற்கு ஆதரவான செயல்பாடுகள் தடுத்து நிறுத்தப்பட்டது.

அவர் குடியரசுத் தலைவராக இருந்த காலத்தில் தான் கடைகோடி விவசாயி குடியரசுத் தலைவர் மாளிகையில் விருந்துண்டு நீதி கேட்க முடிந்தது. அவரது மறைவு தமிழ்நாடு விவசாயிகளுக்கு மிகப் பெரும் பேரிழப்பு. அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை விவசாயிகள் சார்பில் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: வேளாண் காப்பீட்டு நிறுவனங்களைக் கண்டித்து போராட்டம்' - பி.ஆர். பாண்டியன் அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.