சொத்து குவிப்பு வழக்கில் கைதுசெய்யப்பட்ட சசிகலா நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று விடுதலையானார். அவரின் விடுதலையை தமிழ்நாடு முழுவதும் உள்ள அமமுக கட்சியினர் இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் போஸ்டர் ஒட்டியும் கொண்டாடி மகிழ்ந்தனர்.
அதன் ஒரு பகுதியாக, சசிகலாவின் சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அமமுகவினர் அளவு கடந்த மகிழ்ச்சியோடு அவரின் விடுதலையை கொண்டாடினர். அமமுக கொடியை ஏந்தி இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாக சென்ற தொண்டர்கள் மன்னார்குடியில் அமைந்துள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதுகுறித்து பேசிய தொண்டர்கள், "சசிகலா விடுதலை அடைந்தது போல் விரைவில் ஆட்சியிலும் அமர்வார்" என்று மகிழ்ச்சி தெரிவித்தனர்.
இதையும் படிங்க; சசிகலா விடுதலையால் பெரும் மகிழ்ச்சி! - டிடிவி.தினகரன்