தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக கரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கரோனா பரவலைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், கூத்தாநல்லூர் பகுதியைச் சேர்ந்த 52 வயது ஆண் ஒருவர் கரோனா உறுதி செய்யப்பட்டு, அம்மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இன்று மூச்சுத் திணறல் ஏற்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
அம்மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்பு காரணமாக ஏற்பட்டுள்ள இரண்டாவது உயிரிழப்பு இதுவாகும்.
திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை 528 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 224 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், மீதம் உள்ள நபர்கள் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.