திருவாரூரில் புனித பாத்திமா அன்னை ஆலயம் பிடாரி அம்மன் கோயில் தெருவில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் எழுபதாம் ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு, புனித பாத்திமா ஆலயத்தில் இருந்து கொடியானது ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நான்கு ரதவீதி வழியாக வலம் வந்து மீண்டும் திருக்கோயிலை வந்தடைந்தது.
பின்னர், கொடியானது பங்குத்தந்தை உலகநாதன் தலைமையில் புனிதம் செய்யப்பட்டு வாணவேடிக்கையுடன் ஏற்றப்பட்டது.
இந்நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் மலர்களைத் தூவி வழிபாடு செய்தனர். திருவிழாவானது இன்று தொடங்கி மே மாதம் 5ஆம் தேதி வரை நடைபெறுகிறது.