திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே பழங்களத்தூர் கிராமத்தை சேர்ந்த ராகுல் பிரியன் (29). அவரது உறவினரான வினிதாவை மூன்று வருடமாக காதலித்து வந்துள்ளார். இருவரும் சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த நிலையில் இவர்களது காதலுக்கு ராகுல் பிரியன் வீட்டில் ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த இருவரும் சென்னையில் இருந்து நேற்று பழங்களத்தூர் வந்தனர்.
பின், கையகளத்தூர் ரயில்வே தண்டவாளத்தில் இன்று அதிகாலை 5 மணிக்கு சரக்கு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக் கொண்டனர். இச்சம்பவம் குறித்து தஞ்சாவூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதல் ஜோடி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.