திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள நெடுவாக்கோட்டையில் இன்று (ஆகஸ்ட் 16) அதிகாலை வேகமாக சென்ற லாரி ஒன்று, சாலையில் நின்றிருந்த மற்றொரு லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் நான்கு பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், ஓட்டுநர் பலத்த காயமடைந்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மன்னார்குடி காவல் துறையினர், லாரியில் சிக்கியிருந்தவர்களை மீட்டு உடற்கூறாவிற்காக மன்னார்குடி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், படுகாயமடைந்த ஓட்டுநர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து விபத்துக்கான காரணம் குறித்து மன்னார்குடி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க...மதுபானக் கடையில் ரூ.5.39 லட்சம் திருடிய ஊழியர்கள் இருவர் கைது!