மறைந்த திமுக தலைவர் மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் விழா இன்று தமிழ்நாடு முழுவதும் அக்கட்சித் தொண்டர்களால் கொண்டாடப்பட்டுவருகிறது.
அதன் ஒரு பகுதியாக திருவாரூரை அடுத்த அம்மையப்பன் என்ற பகுதியில் இயங்கிவரும் தனியார் கல்லூரியில் பயிலும் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு முகக்கவசம், அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் அடங்கிய தொகுப்பை திருவாரூர் சட்டப்பேரவை உறுப்பினர் பூண்டி. கலைவாணன் வழங்கினார்.
அதைத் தொடர்ந்து மாணவர்களிடையே பேசிய அவர், கல்வியின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார். இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் தாளாளர், கல்லூரி நிர்வாகிகள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோர் தகுந்த இடைவெளியைப் பின்பற்றி கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: நாடு உள்ளவரை கருணாநிதி புகழை மறக்க முடியாது: கே.என். நேரு புகழாரம்