திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் தெற்கு வீதியில் எம்.ஜி.ஆர் சிலை நிறுவப்பட்டு திறக்கப்படாமல் இருந்தது. சிலையை திறந்தால் அப்பகுதியைச் சேர்ந்த அமைச்சர் காமராஜின் பதவிக்கு ஆபத்து வரும் என ஜோதிடர் கூறியதாகக் கட்சி தொண்டர்களிடையே கருத்து நிலவியது. இக்காரணத்தால் பல ஆண்டுகளாக எம்.ஜி.ஆர் சிலை திறக்கப்படாமல் மூடிவைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், எம்.ஜி.ஆர் சிலையின் அருகிலேயே ஜெயலலிதாவின் சிலையையும் அதிமுகவினர் இரவோடு இரவாக நிறுவி மாலை அணிவித்து திறந்து வைத்துள்ளனர். முன்னறிவிப்பு ஏதும் இன்றி அதிமுகவினரே எம்.ஜி.ஆர் சிலையின் அருகில் அனுமதி வழங்கப்படாத நிலையில், ஜெயலலிதாவின் சிலையை நிறுவியுள்ளது அனைத்து கட்சியினரிடமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பொங்கலுக்கு 29,213 பேருந்துகள் ஏற்பாடு - அமைச்சர் தகவல்!