திருவாரூர்: வருமானத்திற்கு அதிகமான சொத்துக் குவிப்பு புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அதிமுகவில் உணவு பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் சோதனை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் அவர் தொடர்புடைய 49 இடங்களிலும், சென்னையில் 6 இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள காமராஜின் வீடு, அவரது உறவினர்கள், நண்பர்கள் வீடு என 49 இடங்களில் காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதிகாலை 5 மணி முதல் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.முன்னாள் அமைச்சர் காமராஜ், அவரது மகன்கள் இனியன், இன்பன் உட்பட 6 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
முன்னாள் அமைச்சர் காமராஜ் அவரது பெயரிலும், அவர்களது நண்பர்கள் பெயரிலும் வருமானத்திற்கு அதிகமாக ரூ.58 கோடியே 44 லட்சத்து 38 ஆயிரத்து252 மதிப்புள்ள சொத்துக்களை சேர்த்துள்ளது தெரியவந்துள்ளது.
அதன் அடிப்படையில் சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, தஞ்சாவூர், மற்றும் திருவாரூர் மாவட்டங்கள் என 49 இடங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:தமிழ்நாடு முழுவதும் இரண்டு ஒப்பந்ததாரர்கள் தொடர்பாக 45-க்கும் மேற்பட்ட இடங்களில் ரெய்டு